• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்க்ரூவோர்ம்: அமெரிக்காவில் சதை உண்ணும் புழு அச்சுறுத்தல் – லட்சக்கணக்கான ‘மலட்டு’ ஈக்களை களமிறக்கிய அரசு

Byadmin

Jun 8, 2026


ஒட்டுண்ணி, அமெரிக்க விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், மேக்ஸ் மட்சா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் 1966-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட, சதையை உண்ணும் ஒட்டுண்ணி தற்போது டெக்சாஸில் கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஸ்க்ரூவோர்ம் ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின் முக்கிய அம்சமாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பல கோடி மலட்டுத்தன்மை கொண்ட ஈக்களை வெளியிடும் திட்டம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த ஒட்டுண்ணியின் பரவலைத் தடுக்க தேவையான அளவுக்கு மலட்டுத் தன்மை கொண்ட ஈக்கள் தற்போது இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தவிர, அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் முதன்முறையாக இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்கவும், இந்தப் பூச்சிகளைக் கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மனிதர்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து குறைவாகவே இருந்தாலும், இந்தப் பரவல் மாட்டிறைச்சி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் அஞ்சுகின்றனர்.

By admin