• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து கவலை அடைவது ஏன்?

Byadmin

Oct 22, 2024


தென்மாநிலங்களில் குறைந்துவரும் மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

ஆந்திரப் பிரதேச மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதேபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று, அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்துப் பேசும்போது ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

“இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம்” என அவர் குறிப்பிட்டார்.

By admin