• Sat. Jun 7th, 2025

24×7 Live News

Apdin News

‘ஸ்பைடர் வெப்’ தாக்குதல் மூலம் ரஷ்யாவை யுக்ரேன் குறிவைத்தது எப்படி ? முழு விவரம் என்ன ?

Byadmin

Jun 4, 2025


ரஷ்ய ராணுவ விமான தளங்களில்  தாக்குதல்

பட மூலாதாரம், USS

படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த தாக்குதல் குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார்.

இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், அசாதாரணமான திறமையுடன் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

18 மாதங்களாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதின் விளைவு தான் இந்த மிகப்பெரிய தாக்குதல்.

ஜூன் 1 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட யுக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் உள்ள விமானப்படைத் தளங்களைத் தாக்கி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானங்களை குறிவைத்தன.

இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு “ஸ்பைடர் வெப்” எனக் குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டது.

By admin