• Sun. Dec 22nd, 2024

24×7 Live News

Apdin News

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது | Srirangam Rangarajan arrested for defaming Sriperumbudur jeeyar on social media

Byadmin

Dec 16, 2024


சென்னை: ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் நரசிம்மன் கைது செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் ‘Our Temples’ (நம்​முடைய கோவில்​கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதி​யாக​வும், அரசியல் ரீதி​யாக​வும் பல்வேறு கருத்துகளை தெரி​வித்து வீடியோ வெளி​யிடுவதை வழக்​கமாக கொண்​டுள்​ளார்.

அந்த வகையில் ‘ஸ்ரீரங்கம் பெரிய பெரு​மாளுக்கு நடந்த அபச்​சா​ரங்​கள்’ என்ற தலைப்​பில் யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ வெளி​யிட்​டிருந்​தார். அதில், ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பல்வேறு குற்​றச்​சாட்டுகளை முன்​வைத்​திருந்​தார். இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்​கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​துக்கு ஆன்லைன் வாயிலாக ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்​பில் புகார் மனு அளிக்​கப்​பட்​டது. காவல் ஆணையர் அருண் உத்தர​வின்​பேரில், மத்திய குற்​றப்​பிரிவு சைபர் க்ரைம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர்.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் மீது 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்நிலை​யில், தனிப்படை போலீ​ஸார் ஸ்ரீரங்கம் சென்று ரங்க​ராஜனை அவரது வீட்​டில் கைது செய்​தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர். விசா​ரணைக்​குப் பின்னர் ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் நீதி​மன்​றத்​தில் ஆஜர்படுத்​தப்​பட்டு, சிறை​யில் அடைக்​கப்​படு​வார் என்று ​போலீ​ஸார் தெரி​வித்தனர்.



By admin