• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம் | Integrated Centre of Excellence for Cancer Treatment inaugurated in Sri Ramachandra

Byadmin

Nov 4, 2025


சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது.

நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை புற்​று​நோய் மையத்​தின் துணை செயல் தலை​வரும், புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணரு​மான மருத்​து​வர் எப்​.ஹேமந்த் ராஜ் இந்த மையத்​தைத் திறந்து வைத்​தார்.

மருத்​து​வர் ஹேமந்த் ராஜ் பேசும்​போது, “மருத்​து​வர்​கள் புற்​று​நோய்க்கு சிகிச்சை அளிப்​பதுடன், நோயாளி​களு​டன் நேரம் செல​விட்​டு, அவர்​களின் கவலைகளைக் கேட்​டு, உணர்ச்சி ரீதி​யான ஆதரவை வழங்க வேண்​டும். நோயாளி​களின் குடும்​பத்​தினரிடம் நோயின் தன்மை மற்​றும் சிகிச்சை முறை​களை பற்​றி​யும் விளக்க வேண்​டும்.

புற்​று​நோய் சிகிச்சை துறை​யில் பல்​வேறு மருத்​துவ ஆராய்ச்சி வாய்ப்​பு​கள் உள்​ளன. அதை இளம் மருத்​து​வர்​கள் மேற்​கொள்ள வேண்​டும். சென்னை புற்​று​நோய் மையத்​தின் நோயாளி​களின் பதிவேடு ஸ்ரீராமச்​சந்​திரா பதிவேட்​டுடன் இணைக்​கப்​படு​வதன் மூல​மாக சிகிச்சை முறை​கள் மேம்​படும். புதிய ஆராய்ச்​சிகளுக்கு ஏது​வாக இருக்​கும்” என்​றார்.

துணைவேந்​தர் மருத்​து​வர் உமா சேகர் பேசுகை​யில், “இந்த சிறப்பு மையம் உயர்​தர​மான வசதி​களை​யும் ஒரே இடத்​தில் உள்​ளடக்​கிய​தாக உள்​ளது. இந்த சிறப்பு மையத்​தின் நோக்​கம், நோயாளி​களுக்கு தனித்​து​வ​மான மற்​றும் நெறி​முறை சார்ந்த உயர்தர சிகிச்சை அளிப்​ப​தாகும்” என்​றார்.

இந்த நிகழ்​வில், மருத்​து​வக் கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் கே.​பாலாஜி சிங், மருத்​துவ மைய இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.பி.சு​தாகர் சிங், மருத்​துவ கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் பி.சுரேந்​திரன், புற்​று​நோய் அறுவை சிகிச்​சைத் துறை தலை​வர் மருத்​து​வர் ஜகதீஷ் சந்​திர போஸ், புற்​று​நோய் கதிர்​வீச்சு துறைத் தலை​வர் மருத்​து​வர் கே.சதீஷ் ஸ்ரீநி​வாஸ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்​.



By admin