• Wed. Dec 17th, 2025

24×7 Live News

Apdin News

ஸ்ரீவைகுண்டம்: அசாம் பெண் வன்கொடுமை – 2 சிறார்கள் உள்பட மூவர் கைது

Byadmin

Dec 16, 2025


ஸ்ரீவைகுண்டம்: அசாம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 2 சிறார்கள் உள்பட மூவர் கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறார்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலை செய்து வந்துள்ளனர்.

காவல்துறை அளித்த தகவலின்படி, திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் (வயது 27) என்பவர் சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை வேலையில் சேர்த்துவிட்டுள்ளார்.

காவல்துறை கூறுவது என்ன?

இந்நிலையில், “தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி அத்தம்பதி அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்துள்ளனர். அப்போது முகமது மஹ்புல் ஹுசைன், இரண்டு இளம் சிறார்களுடன் அசாம் தம்பதியைத் தடுத்து நிறுத்தி, கணவரைப் பிடித்து வைத்ததோடு, மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக” காவல்துறை கூறுகிறது.

By admin