• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

ஹக்கிபிக்கி ஹேர் ஆயில்: கர்நாடகாவில் வாழும் பழங்குடியினர் இந்த எண்ணெயை எவ்வாறு தயாரிக்கின்றனர்?

Byadmin

Oct 22, 2024


ஹக்கிபிக்கி- பழங்குடியினரின் எண்ணெய்
படக்குறிப்பு, ஹக்கிபிக்கி எண்ணெய் விளம்பரம்

ஒரு படத்தில் இரண்டு பெண்கள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து தங்களின் இடுப்புக்கும் கீழே நீண்டுள்ள கூந்தலை பெருமிதத்துடன் காட்டுகிறார்கள். அவர்களின் கைகளில் கருப்பு நிற எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் உள்ளது.

இதுபோன்ற படங்கள் கொண்ட விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களில் தொடர்ந்து அதிகமாக நாம் காணலாம்.

ஆன்லைன் விற்பனை தளங்களில் ஆயுர்வேத எண்ணெய் என்று தேடும் போது, ​​இதுபோன்ற படங்கள் இருக்கும் பல பாட்டில்களை நாம் பார்க்கலாம். இப்படியான பாட்டிலில் உள்ள எண்ணெய் பற்றி நிறைய விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் உள்ளன.

பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் மற்றும் சமூக ஊடக பிரபலங்களும் இந்த எண்ணெயைப் பாராட்டி புகழ்கிறார்கள். இதுவே மக்கள் பலர் இந்த எண்ணையை வாங்க ஈர்க்கின்றது.

By admin