• Mon. Nov 25th, 2024

24×7 Live News

Apdin News

ஹசாகா: சிரியாவின் இந்த நகரில் தங்கத்தை விட தண்ணீர் மதிப்பு மிக்கதாக பார்க்கப்படுவது ஏன்?

Byadmin

Nov 25, 2024


காணொளிக் குறிப்பு, கடும் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் சிரியா மக்கள்

தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் தண்ணீர் – சிரியாவில் என்ன நடக்கிறது?

வட சிரியாவில் மோதல் மற்றும் அதீத வெப்பம் தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வட சிரியாவில் குர்திஷ் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள ரோஜாவா பிரதேசத்தில் உள்ள ஹசாகா நகரம் தண்ணீர் நெருக்கடியில் உள்ளது.

அகமது போன்றவர்கள் டேங்கரில் கொண்டுவரும் தண்ணீரை நம்பி லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

புறநகரில் உள்ள ஏழ்மையான பகுதி நஷ்வா. மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்கும் என்ஜிஓ மூலம் அகமது தண்ணீர் விநியோகிக்கிறார்.

இலவச தண்ணீர் இங்குள்ள மக்களுக்குப் போதவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin