• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஹன்ஸ்ராஜ் வயர்லஸ்: பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் பயணித்த ரயிலில் வெடித்த குண்டு- இதற்கு உதவிய அறிவியல் மேதை

Byadmin

Jan 22, 2026


வைஸ்ராய் லார்ட் இர்வின், ரயிலில் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1929ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி கடும் குளிராக இருந்த காலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் இர்வின் மற்றும் அவரது மனைவி பயணம் செய்த சிறப்பு ரயிலில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டுவெடிப்பு, டெல்லியில் இருந்து ஆறு மைல் தொலைவில் ரயில் பாதையில் நடத்தப்பட்டது.

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தி, அடுத்த நாள் வெளியான தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் வெளியானது. தென்னிந்தியாவில் இருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்த லார்ட் இர்வினின் தனிப்பட்ட சிறப்புப் பெட்டி (சலூன் என்றழைக்கப்பட்டது) தாக்குதலில் இருந்து தப்பிவிட்டதாக அந்தச் செய்தி கூறியது.

ரயிலில் இருந்த லார்ட் இர்வின் இந்த வெடிப்பு சத்தத்தை, பன்மூட்டத்தின்போது ரயில்களுக்கு விடப்படும் பனிமூட்ட எச்சரிக்கைச் சமிக்ஞை எனத் தவறாகக் கருதினார். பொதுமக்களோ அதை இர்வினை வரவேற்க முழங்கப்பட்ட பீரங்கிச் சத்தம் என்று நினைத்துக் கொண்டனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட அமெரிக்க நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ், பனிமூட்டம்தான் இர்வின் தம்பதி உயிர் பிழைக்கக் காரணமாக அமைந்தது என்றும், அது “தெய்வீக அருள்” என்றும் தெரிவித்தது.

பைலட் என்ஜின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டதாக ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ செய்தி வெளியிட்டிருந்தது.

By admin