• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்கு: இந்தியா-கனடா இடையே மீண்டும் வலுக்கும் பிரச்னை

Byadmin

Oct 15, 2024


ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக.

2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, காலிஸ்தானுக்கு ஆதரவான ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.

கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் இப்போது அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.

“ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று கனடா தூதரகத்தில் இருந்து தகவல் ஒன்று வந்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியாவின் தூதரக உயர் அதிகாரி மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. கனடாவில் ட்ரூடோ அரசாங்கம் மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இதைச் செய்கிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

By admin