• Thu. Oct 10th, 2024

24×7 Live News

Apdin News

ஹான் காங்: தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்

Byadmin

Oct 10, 2024


ஹான் காங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹான் காங் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘தி வெஜிடேரியன்’ என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ பரிசுப் பெற்றார்

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங், 2007-ஆம் ஆண்டு வெளியான தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ சர்வதேச பரிசுப் பெற்றார்.

”வரலாற்று பெரும் துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் ஆழமான உரைநடைக்காக” பரிசு அறிவிக்கும் நிகழ்வின்போது அவர் பாராட்டப்பட்டார்

நோபல் பரிசுக் குழு 1901-ஆம் ஆண்டு முதல் இலக்கிய விருதை வழங்கி வருகிறது. 18வது முறையாக ஒரு பெண் எழுத்தாளர், இலக்கிய பரிசை வென்றுள்ளார்.

By admin