• Sat. May 24th, 2025

24×7 Live News

Apdin News

ஹார்வர்ட்: வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப் நிர்வாக உத்தரவை நிறுத்தி வைத்த நீதிமன்றம்

Byadmin

May 24, 2025


ஹார்வர்ட்

பட மூலாதாரம், Getty Images

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது.

பாஸ்டனில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசாங்கத்தின் நடவடிக்கை “தெளிவான சட்ட மீறல்” என அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

”சட்டத்தை பின்பற்றவில்லை என்பதால், ஹார்வர்டின் சர்வதேச மாணவர் அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டது” என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் கூறியுள்ளார்.

By admin