• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

ஹாலிவுட்: உலகெங்கும் கொடிகட்டிப் பறந்த திரைத்துறை திடீரென முடங்கியது ஏன்? என்ன பிரச்னை?

Byadmin

Oct 4, 2024


ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது.

ஹாலிவுட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் பொற்காலத்தில் இருந்தார் மைக்கேல் ஃபோர்டின்.

நடிகரும் வான்வழிக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளருமான, மைக்கேல் ஃபோர்டின் 2012ஆம் ஆண்டில் டிரோன்களை பறக்கச் செய்யும் தனது பொழுதுபோக்கை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றினார். அதே காலகட்டத்தில்தான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது.

பல ஆண்டுக்காலமாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி போன்ற ஓடிடி தளங்களில் வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நேர்த்தியான வான்வழிக் காட்சிகளை உருவாக்கி திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்து வந்தார்.

இப்போது அவர் மீண்டும் வீடற்றவராக மாறும் விளிம்பில் இருக்கிறார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹண்டிங்டனில் கடல் ஓரமாக ஓர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். தெற்கு கலிஃபோர்னியாவில் வசிக்க முடியாததால் அவர்கள் லாஸ் வேகாஸில் குடியேறினர். ஆனால் இப்போது அவர்கள் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

By admin