• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஹிட் 3 விமர்சனம்: ரத்தம் தெறிக்க நடித்திருக்கும் நானி – படம் எப்படி இருக்கிறது?

Byadmin

May 2, 2025


டிரெய்லர்களால் ஏற்பட்ட பரபரப்பு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது

பட மூலாதாரம், Unanimous Productions/X

நானி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள ஹிட் 3 திரைப்படம், ஹிட் வெற்றித் தொடரின் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர்களால் ஏற்பட்ட பரபரப்பு, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஹிட் 3’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

காவல்துறை அதிகாரி அர்ஜுன் சர்க்கார் (நானி) கைது செய்யப்படுவதில் தொடங்கும் திரைப்படத்தில், சிறையில் இருக்கும்போது கதை சொல்வதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி-யாக இருக்கும் அர்ஜுன், அடுத்தடுத்து இரண்டு பேரைக் கொலை செய்கிறார். அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, தலையைத் துண்டித்து கொல்கிறார். இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரியும் ஹீரோ நானி, கொலைக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தப்படுகிறார். விசாரணையில் திடுக்கிடும் மர்மங்கள் வெளியாகின்றன. ஒரே பாணியில் இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது.

By admin