0
‘தக்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ‘ டியூட் ‘ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ஹிர்துஹாரூன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வக்குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ எனும் திரைப்படத்தில் ஹிர்துஹாரூன் , சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி , சாச்சனா , வாஃபா கதீஜா, பீட்டர் .கே , பார்த்திபன் குமார் , அண்டனி தாசன் , சம்யுக்தா ஷான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி குமார் – பார்த்திபன் குமார்- சுஜித் – செல்வகுமார் திருமாறன்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது இசை தொடர்பான இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.