• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு – டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியா கவலை ஏன்?

Byadmin

Sep 20, 2025


ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர்.

டிரம்ப் புதிய “கோல்ட் கார்ட்” (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் யூரோ (சுமார் 9 கோடி இந்திய ரூபாய்)கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும்.

By admin