ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களு அக்கல, கஹஹேன மற்றும் பஹத்கம ஆகிய பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் 22 , 30 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ,11 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் , 12 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 14 கிராம் 670 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான ,மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது appeared first on Vanakkam London.