பேங்காக்கில் உள்ள ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளத்தை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பெண்ணின் காதலரான அவர் தப்பியோடியுள்ளதாகவும், அவரின் பெயர் டேனியல் பெஞ்சமின் கோ வெய்-என் என்று தாய்லந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் பெயர் பிராவ்பிலாட் பலாடோன் என்றும் அவருக்கு 30 வயது என்றும் கூறப்படுகிறது.
அவர் ஹோட்டல் அறையொன்றின் குளியலறையில் சடலமாக கிடந்த நிலையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார்.
அதனையடுத்து, பெண்ணின் காதலர் 25ஆம் திகதி பயணப்பெட்டியுடன் ஹோட்டலை விட்டுப் புறப்பட்டுசென்றுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்.
The post ஹோட்டலின் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு appeared first on Vanakkam London.