• Wed. Mar 4th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்முஸ் நீரிணை: இந்த எண்ணெய் வழித்தடத்தை மூடினால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Mar 4, 2026


எண்ணெய் கப்பல்

பட மூலாதாரம், Reuters

உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் “தீ வைப்போம்” என்று இரான் அறிவித்துள்ளது.

வழக்கமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% வளைகுடாவில் உள்ள இந்த குறுகிய கப்பல் பாதை வழியாகவே செல்கிறது. ஆனால், இரானின் ஜெனரல் சர்தார் ஜப்பாரி, டெஹ்ரான் இப்போது, “ஒரு சொட்டு எண்ணெய் கூட இப்பகுதியை விட்டு வெளியேற விடாது” என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இரானின் பதிலடியால் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட நிச்சயமற்றத்தன்மை மற்றும் இடையூறு ஏற்கெனவே எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது.

இந்த நீரிணையை மூடுவது உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை மேலும் உயர்த்தக்கூடும், மேலும் இந்த நீர்வழி பாதையாக செல்லும் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் சிலவற்றைப் பாதிக்கலாம்.

ஹோர்முஸ் நீரிணை என்றால் என்ன – அது எங்கே இருக்கிறது?

ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாகும், மேலும் எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான நெரிசல் புள்ளியாகவும் உள்ளது.

By admin