• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்முஸ் நீரிணை: போர் கப்பல்களை அனுப்பக் கோரும் டிரம்பின் அழைப்புக்கு உலக நாடுகளின் எதிர்வினை என்ன?

Byadmin

Mar 16, 2026


ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நேட்டோ நாடுகளை டிரம்ப் ஏன் அச்சுறுத்துகிறார்?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் மோதிக்கொண்டிருக்கும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை டொனால்ட் டிரம்புக்கு சிக்கலாக மாறியுள்ளது.

போர்க்கப்பல்களை அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், ஐரோப்பாவும் பிற நாடுகளும் இதுவரை அதிக அக்கறை காட்டவில்லை.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்தார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அவர்கள் உதவாவிட்டால், அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு ‘மிகவும் மோசமானதாக’ அமையும் என்று அவர் கூறினார்.

பினான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியிலும், புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது செய்தியாளர்களிடம் பேசியபோதும் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.

By admin