• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸை கடக்கும் கப்பல்களுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை – அடுத்து என்ன நடக்கும்?

Byadmin

Apr 13, 2026


இரான் அரசுக்குச் சுங்கம்  செலுத்திய எந்தவொரு கப்பலையும் சர்வதேசக் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தவும், சோதனை செய்யவும் அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, இரான் அரசுக்குச் சுங்கம் செலுத்திய எந்தவொரு கப்பலையும் சர்வதேசக் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தவும், சோதனை செய்யவும் அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் இரான் இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் இனி அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் இரான் இடையே சனிக்கிழமை நள்ளிரவு வரை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், எந்த முடிவும் எட்டப்படாமலேயே அவை முடிவுக்கு வந்தன.

இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசுகையில், “எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை, நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில், அமெரிக்காவும் இரானும் இரண்டு வார காலப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்திருந்தன என்பதுடன் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களும் இஸ்லாமாபாத் சென்றிருந்தன. இரு தரப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் நடைபெற்றது.

‘கட்டணம் செலுத்துபவர்களுக்குப் பாதுகாப்பான வழி கிடைக்காது’

ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழைய அல்லது அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் ‘ஒவ்வொரு கப்பலையும்’ அமெரிக்கா முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

By admin