• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் சென்று ‘எண்ணெய் பெற்று கொள்ளுங்கள்’ என கூறும் டிரம்ப் – அமெரிக்கா அதிருப்தி ஏன்?

Byadmin

Mar 31, 2026


ஹோர்மூஸ் சென்று 'உங்கள் எண்ணெயை பெற்றுக் கொள்ளுங்கள்' என கூறும் டிரம்ப் - அமெரிக்கா பொறுமை இழக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், நாட்டின் புதிய தலைமை “முந்தைய தலைமையை விட புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்” என்றார்.

ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படைகளைச் சென்று சந்தித்து வந்ததாகக் கூறும் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த இடம் என்பதைக் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார்.

“இந்தப் பயணம் பெருமைக்குரியது” எனக் குறிப்பிட்ட அவர் அமெரிக்காவின் சிறந்தததைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

இந்தப் போரில் ஈடுபட்டுள்ள படை வீரர்களின் மனநிலை இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரின்போது இருந்ததற்கு நேர் எதிராக உள்ளதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது “ராணுவ நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த முறை உந்துதல், கவனம் மற்றும் வேலையை முடிக்க வேண்டும் என்கிற ‘அவசரமும்’ தெரிகிறது.” என்றார்.

By admin