• Wed. May 27th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இரானின் எதிர்வினை என்ன?

Byadmin

May 27, 2026


இரான், அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திங்கள் அன்று தெற்கு இரானில் நடைபெற்ற தாக்குதல்களை “தற்காப்பு தாக்குதல்கள்” என்று கூறும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

    • எழுதியவர், இயன் ஐக்மேன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களின் மூலம் அப்பட்டமான போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.

திங்கள் அன்று தெற்கு இரானில் நடைபெற்ற தாக்குதல்களை “தற்காப்பு தாக்குதல்கள்” என்று கூறும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்), கண்ணிவெடிகளை வைக்கும் முயற்சியில் இருந்த இரானிய ஏவுகணை தளங்கள் மற்றும் படகுகளை இலக்கு வைத்ததாக கூறியுள்ளது.

ஹோர்மோஸ்கான் பகுதியில் நிகழ்ந்த இந்த “ஆக்ரோஷமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கைகளின்” விளைவுகளுக்கு அமெரிக்காவைத் தான் பொறுப்பு ஆக்குவதாக இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையின் கரையை ஒட்டி இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த முக்கியமான நீர்வழித்தடத்தை இரான் முடக்கியுள்ளதால் உலகம் முழுவதும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.

மோதலை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளின் மீது இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் தெளிவு இல்லை.

By admin