• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்?

Byadmin

Apr 8, 2026


ஹோர்மூஸ் நீரிணை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபை அருகே உள்ள கப்பல் (கோப்புப்படம்)

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க இரான் முன்வந்திருப்பது, கடந்த ஒரு மாதமாக உலகப் பொருளாதாரத்தின் மீது சுமத்தப்பட்ட சில அழுத்தங்கள் இனி குறையத் தொடங்கும் என்பதைக் காட்டுகிறது.

எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்களுக்குத் தேவையான ரசாயனங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட தடை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாகும்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு நெறிமுறை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க விரும்புவதாக இரான் கூறுகிறது.

இரான் ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்புடனும், “வரம்புகளை முறையாகக் கருத்தில் கொண்டும்” அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

By admin