• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணை குறித்து கெட்ட வார்த்தை மூலம் இரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன?

Byadmin

Apr 6, 2026


அனைத்து கப்பல் போக்குவரத்துக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று  தான் விதித்த செவ்வாய்க்கிழமை காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்ய தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் கடந்த சில நாட்களாக இரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகங்களில் கெட்ட வார்த்தைகளால் நிறைந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காகவும் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று தான் விதித்த காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்ய தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

”நரகத்தில் வாழ்வீர்கள்” என்ற தனது முந்தைய அச்சுறுத்தலை அவர் மீண்டும் வலியுறுத்தினார், ஆனால் இரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான “நல்ல வாய்ப்பு” இருப்பதாக அமெரிக்க ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

இரான் அவரது இறுதி எச்சரிக்கையைப் பார்த்து ஏளனம் செய்ததுடன், அது “இயலாமை, பதற்றம் நிறைந்தது மற்றும் முட்டாள்தனமானது” என்று கூறி நிராகரித்தது.

இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் இரண்டாவது விமானப் பணியாளரும், ”எதிரி நாட்டு எல்லைக்குள் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக” டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த புதிய அச்சுறுத்தல் வந்துள்ளது.

By admin