• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை: இரானுக்கு டிரம்ப் மிரட்டலால் அதிகரிக்கும் ஆபத்து என்ன?

Byadmin

Apr 13, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை முற்றுகை, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 12 அன்று, தெஹ்ரானின் புரட்சி சதுக்கத்தில், ‘ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டே உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான விளம்பரப் பலகைக்கு முன்னால், ஒரு பெண் இரானின் தேசியக் கொடியை அசைக்கிறார்.

சனிக்கிழமை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு, இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டியிருந்தது.

அது ஞாயிற்றுக்கிழமை காலையில், அவருடைய ட்ரூத் சோசியல் பதிவுகளின் வாயிலாக வெளியானது.

அமெரிக்கா இரானின் மீது ஒரு கடற்படை முற்றுகையை நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். “சட்டவிரோதக் கட்டணம் செலுத்தும் எவருக்கும், நடுக்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது,” என்று அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க ராணுவம் “முழுமையாகத் தயார் நிலையில்” இருப்பதாகவும், “பொருத்தமான ஒரு தருணத்தில்” இரானுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இரான் ஏற்பதாக தெரியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

By admin