பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கான சுற்று பயணத்தை முடித்துவிட்டு கடைசி பயணமாக இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருநாட்டு நட்புறவு மற்றும் வர்த்தகம் குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற ஒரு பாக்கெட் “பார்லே மெலோடி”சாக்லேட்டை இத்தாலி பிரதமர் மெலோனிக்கு அன்பு பரிசாக வழங்கினார்.