• Tue. Nov 19th, 2024

24×7 Live News

Apdin News

10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க பரிந்துரை | Recommendation to extend train service

Byadmin

Nov 19, 2024


சென்னை: டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அந்த ரயில்கள் விவரம்:

ஞாயிறுதோறும் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் (06012) டிசம்பர் 1 முதல் 2025 பிப்ரவரி 2 வரை 10 ரயில் சேவைகள். மறுமார்க்கத்தில் திங்கள்தோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (06011) டிசம்பர் 2 முதல் பிப்ரவரி 3 வரை 10 சேவைகள்.

இரு மார்க்கங்களிலும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (06070/ 06069), திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் (06030/ 06029), தாம்பரம் – கோவை (06184/ 06185) ஆகிய வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள்.

தாம்பரம் – ராமநாதபுரம் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (06103/ 06104) ஆகிய ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



By admin