10
10 வயது சிறுவனை அவனது பெற்றோர், ஸ்பெயின் விமான நிலையத்தில் தனியாக விட்டுச் செல்ல முயன்றதாக ஸ்பெயின் விமானச் சேவை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
அந்தச் சிறுவனின் கடவுச்சீட்டு காலாவதியானதால் பெற்றோர் அவரை விட்டுவிட்டு விமானத்தில் ஏறியதாக அந்த ஊழியர் கூறினார்.
உறவினரை அழைத்து, மகனை வந்து அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்ட பின் அவர்கள் இருவரும் அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.
சிறுவன் தனியாக இருந்ததை அதிகாரிகள் பார்த்ததாகவும் விமானச் சேவை ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.
உடனடியாக அதிகாரிகள், பெற்றோர் ஏறிய விமானத்தைக் கண்டறிந்து விமானம் புறப்படுவதற்கு முன் அதிலிருந்து அவர்களை வெளியேற்றி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
“பெற்றோரால் எவ்வாறு பிள்ளைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடிகிறது?” என்று அந்த விமான நிலைய ஊழியர் வினவினார்.