0
இங்கிலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே “100 ஆண்டு கால கூட்டாண்மை” எனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்காக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று வியாழக்கிழமை (16) உக்ரைன் – கியேவுக்குப் பயணித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் ஏற்கெனவே நாட்டிற்கு உறுதியளிக்கப்பட்ட பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை முறைப்படுத்தல் உள்ளிட்ட பலவற்றை வழங்குகிறது.
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த கோடையில் பதவியேற்ற பிறகு பிரதமரின் முதல் பயணம் இதுவாகும்.
உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky, இங்கிலாந்து போன்ற முக்கிய நட்பு நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பற்றி விவாதிக்க ஆர்வமாக உள்ளார்.
“இது இங்கும் இப்போதும் மட்டுமல்ல, அடுத்த நூற்றாண்டுக்கான நமது இரு நாடுகளிலும் முதலீடு பற்றியது” என மேற்படி ஒப்பந்தம் குறித்து உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, “100 ஆண்டு கால கூட்டாண்மை” ஒப்பந்தத்தில் கடல்சார் பாதுகாப்பு, ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இராணுவ ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.