காணொளி: 100 கிலோ தங்க கழிவறை எவ்வளவு விலை போகும்?
18 கேரட் தங்கத்தாலான இந்த கழிவறை இருக்கை 100 கிலோ எடை கொண்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலத்திற்கு தயாராக உள்ளது.
இத்தாலிய கலைஞர் மௌரிட்சியோ கேத்திலன் (Maurizio Cattelan) 18 கேரட் தங்கத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.
இது கடைசியாக 2016ல் குகன்ஹைய்ம் அருங்காட்சியகத்தில் (Guggenheim) காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது சாத்தபி ஏல நிறுவனம் (Sotheby) இந்த கழிப்பறையை ஏலம் விடவுள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ.88 கோடி ஆகும்.
இதன் விலை மேலும் அதிகரிக்கும் என ஏல ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு’அமெரிக்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது.
இது வெறும் கலைப்பொருள் அல்ல. இது முழுக்க முழுக்க செயல்படும் ஒன்றாகும். ஏலத்திற்கு முன்பாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு