• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

“100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் வேலையில் பாஜக இறங்கியிருக்கிறது” – ஸ்டாலின் தாக்கு | Tamil Nadu Chief Minister Stalin Slammed the central government

Byadmin

Mar 29, 2025


சென்னை: “காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை” என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு!

உங்களுக்கு ‘வேண்டப்பட்ட’ கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.



By admin