• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

106ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி; 5 மன்னர்களின் ஆட்சியை கண்டுள்ளார்!

Byadmin

Mar 5, 2025


1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி பிறந்த இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற மூதாட்டி, தனது 106ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம். அத்துடன், 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.

மேலும் இரண்டு உலகப் போர்களை கடந்து வந்திருக்கிறார்.

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம் குறித்து மூதாட்டி பகிர்ந்துள்ளார்.

இவர் இனிப்புகளை அதினம் விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் தனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியுள்ள எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சாக்லேட் மட்டுமல்லாது, ஈஸ்டர் பண்டிகையின் போது இனிப்பு வகைகளை விரும்பி ருசிப்பதாகவும் கூறுகிறார்.

By admin