4
ஈரான் நாட்டில் 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை, அவரது தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு வெளியிடப்படுகிறது.
ஈரான் நாட்டின் மக்கள்தொகை சுமார் 9 கோடியாகும். இந்த நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. அதன்படி, ஈரான் பெண்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பெண்களின் தலையாய கடமை குழந்தைகள் பெற்று கொடுப்பது தான் என்று அங்குள்ள முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
ஈரானை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது மிகவும்குறைவாகும். ஆண்டுக்கு 15 வயதுக்கு உட்பட்ட 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடக்கிறது. அதேபோல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கும் திருமுணம் செய்து வைக்கப்படுகிறது.
இதற்கிடையே தான் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க கடந்த ஆண்டு ஈரான் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகள்களை, அவர்களின் தந்தையே திருமணம் செய்து கொள்ள அந்த புதிய சட்டம் வழிவகுத்து கொடுக்கிறது. இது கடும் சர்ச்சையானது. தற்போது சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரான் இந்த புதிய சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்த ஈரானை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‛‛ஈரானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. மன்னர் ஆட்சியை விட தற்போது பெண்களுக்கு அதிக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஈரானில் மன்னர் ஆட்சி நடைபெற்றபோது, பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தது. மேலும் விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள் பெற்றிருந்தனர்.
‛‛ஆனால், 1979இல் நடைபெற்ற ஈரான் புரட்சிக்குப் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறின. பெண்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன. தற்போது பெண்களின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதையும் குறைத்து 9 வயதாக மாற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களின் திருமண வயது 15ஆக குறைக்கப்பட்டுள்ளது.
‛‛கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. புதிய சட்டத்தை இரத்து செய்ய வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.