3
மின் சிகரெட்டைப் பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக உலகச் சுகாதார ஸ்தபனம் (WHO) தெரிவித்துள்ளது.
சிகரெட்டை விட பாதிப்பு குறைவு என்று விளம்பரப்படுத்தப்படும் மின் சிகரெட்டுகள் உண்மையில் சிறுவர்களை நிக்கோட்டின் இரசாயனத்துக்கு அடிமைப்படுத்துவதாக WHO குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் 100 மில்லியன் மக்கள் மின் சிகரெட்டைப் பயன்படுத்துவதாகவும் உலகச் சுகாதார ஸ்தபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த 100 மில்லியன் பேரில் 1 3க்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 15 மில்லியன் என்றும் இது அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் WHO குறிப்பிட்டுள்ளது.