• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

’14 கிரவுண்ட் நில வாடகை ரூ.1,400′: அம்ருதாஞ்சன் நிறுவன வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்

Byadmin

Mar 22, 2026


மயிலை கபாலீஸ்வரர் கோவில்

பட மூலாதாரம், https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் 1,400 ரூபாய் வாடகையை செலுத்தி அம்ருதாஞ்சன் நிறுவனம் அனுபவித்து வந்தது. வாடகை உயர்வு அமலுக்கு வந்த நாளில் இருந்து எந்த தொகையையும் செலுத்தவில்லை’

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது இந்துசமய அறநிலையத்துறை இவ்வாறு வாதிட்டது.

நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை செலுத்த மறுத்து அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

வலி நிவாரண தைலம் தயாரிப்பில் புகழ்பெற்ற அம்ருதாஞ்சன் நிறுவனம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 132 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்நிறுவனம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் மற்றும் 910 சதுர அடி நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

By admin