• Sat. Mar 14th, 2026

24×7 Live News

Apdin News

149ஆவது நீலவர்ணங்களின் சமர் | சென் தோமஸ் 302, றோயல் 175 – 4 விக்.

Byadmin

Mar 14, 2026


எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் 149ஆவது நீல வர்ணங்களின் சமர்  மாபெரும் கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இப் போட்டியில் சென் தோமஸ் அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து சென் தோமஸ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய தினம் ரெஷோன் சொலமன்ஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்களைப் பெற்றார்.

நேற்றைய தினம் ஜேடன் அமரவிர 52 ஓட்டங்ளையும் அணித் தலைவர் அவினாஷ் பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ககன் கமகே 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எஸ். சூரியஆராச்சி 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

றோயல் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில் அணித் தலைவர் ரெஹான் பீரிஸ் 63 ஓட்டங்களைப் பெற்றார். ரமிரு பெரேரா 70 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

பந்துவீச்சில் ஜீ. மெண்டிஸ் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

கடைசி நாள் ஆட்டம் நாளைக் காலை தொடரும்

The post 149ஆவது நீலவர்ணங்களின் சமர் | சென் தோமஸ் 302, றோயல் 175 – 4 விக். appeared first on Vanakkam London.

By admin