• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

15 இடங்களில் மாட்டு கொட்டகை – சென்னை மாநகராட்சி நடவடிக்கை | chennai corporation construct cow shed at 15 places

Byadmin

Jan 22, 2025


சாலைகளில் சுற்றித் திரி​யும் மாடு​களால் ஏற்படும் தொல்​லைகளை தடுக்க மாநக​ராட்சி சார்​பில் 15 இடங்​களில் மாட்டு கொட்டகைகள் கட்டப்​பட்டு வருகிறது. சென்னை மாநகரில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரு​வல்​லிக்​கேணி மற்றும் விரிவாக்​கப்​பட்ட பகுதி​களில் மாடுகள் முட்டி காயமடைவது தொடர்​கதையாக இருந்து வருகிறது.

மாநக​ராட்சி நிர்​வாகம் சார்​பில் அவ்வப்​போது பொது​மக்​களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரி​யும் மாடுகளை பிடித்து சென்​றாலும் பிரச்​சினை தீர்ந்​த​பாடில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரு​வல்​லிக்​கேணி​யில் மாடு முட்​டிய​தில் முதி​யவர் ஒருவர் உயிரிழந்​தார்.

அதனைத் தொடர்ந்து மாநக​ராட்சி சார்​பில் இரவு நேரங்​களில் மாடுகளை பிடிக்​கும் நடவடிக்கை​யும் எடுக்​கப்​பட்​டது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 237 மாடுகளை பிடித்து, ரூ.92 லட்சத்து 4 ஆயிரத்து 700 அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 2024-ம் ஆண்டு 2 ஆயிரத்து 427 மாடுகள் பிடிக்​கப்​பட்டு, ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆண்டு, முதல்​முறை பிடிபடும் மாடு​களுக்கு ரூ.5 ஆயிரத்​திலிருந்து ரூ.10 ஆயிர​மாக​வும், 2-வது முறையாக பிடிபடும் மாடு​களுக்கு அபராத தொகை ரூ.10 ஆயிரத்​தில் இருந்து ரூ.15 ஆயிர​மாக​வும் மாநக​ராட்சி உயர்த்தி​யது. முதல்​முறை பிடிபடும் கால்​நடைகளை அடையாளம் காண கால்​நடைகளின் உடலில் சிப் பொருத்​த​வும் திட்​ட​மிட்​டிருந்​தது.

இருப்​பினும் மாடுகள் சாலை​யில் சுற்றி திரிவது தொடர்ந்​தது. இந்நிலை​யில் கால்நடை வளர்ப்​போர் கோரிக்கையை ஏற்று மாநக​ராட்சி சார்​பில் 15 இடங்​களில் மாட்டு கொட்​டகைகள் அமைக்​கப்​பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கால்நடை விவசா​யிகள் பாது​காப்பு சங்கத்​தினர், மாநக​ராட்சி நிர்​வாகத்தை அணுகி, மாட்டு கொட்​டகைகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்​திருந்​தனர்.

இதுதொடர்பாக அச்சங்​கத்​தின் மாநில துணைத்​தலைவர் துரை நரசிம்மன் கூறிய​தாவது: சென்னை​யில் 5 ஆயிரம் குடும்​பங்கள் மாடுகளை பராமரித்து வருகின்றன. ஒவ்வொரு குடும்ப​மும் குறைந்தது 30 மாடுகளை பராமரித்து வருகின்றன. மாடுகளை வளர்க்க ஏதுவான கட்டமைப்பை மாநக​ராட்சி அமைக்க வேண்​டும்.

ஒரு மாட்டுக்கு 4 அடி அகலம், 10 அடி நீளம் அளவில் இடம் ஒதுக்க வேண்​டும். மாட்டு கொட்​டகைகளுக்கான மின்​சா​ரம், குடிநீர் கட்ட​ணம், பராமரிப்பு கட்ட​ணம், வரி, கழிவுநீர் கட்டணம் ஆகிய​வற்றை நாங்களே ஏற்றுக்​கொள்​கிறோம். ஒரு மாட்டுக்கு வாடகையாக தலா ரூ.50-ம் மாநக​ராட்​சிக்கு செலுத்து​கிறோம் என கோரிக்கை விடுத்​திருக்​கிறோம். அதன்படி மாட்டு கொட்டகை அமைக்​கப்​பட்டு வருகிறது. வாடகை விவரங்களை மாநக​ராட்சி இன்னும் இறுதி செய்ய​வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மாநக​ராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறிய​தாவது: ஒவ்வொரு இடத்​தி​லும் சுமார் 200 மாடுகளை பராமரிக்​கும் வகையில் 15 மாட்டு கொட்​டகைகளை கட்டி வருகிறோம். இவை விரை​வில் பயன்​பாட்டுக்கு வரும். அதன்​மூலம் மாநகர சாலைகளில் சுற்றித் ​திரி​யும் சு​மார் 3 ஆ​யிரம் ​மாடு​கள் ​கொட்​டகைக்​குள் அடைக்​கப்​பட்டு​விடும். அவற்​றால் சாலைகளில் ஏற்​படும் தொல்​லைகள் குறை​யும். ​மாநக​ராட்​சிக்​கும் வரு​வாய் கிடைக்​கும். இவ்​வாறு அவர்​ கூறினார்​.



By admin