• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

15 பந்துகளில் அரைசதம் அடித்த 15 வயது சூர்யவன்ஷி. சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி

Byadmin

Mar 31, 2026


15 பந்துகளில் அரைசதம் அடித்த 15 வயது சூர்யவன்ஷி. சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி

பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images

படக்குறிப்பு, சிஎஸ்கே அணிக்கெதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார் வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் விளையாடுகிறது. கவுஹாத்தியில் நடக்கும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

ராயல்ஸ் அணி தங்களின் 3 ஹோம் ஆட்டங்களை கவுஹாத்தியிலும் விளையாடுகிறது. அதனால், இது அந்த அணியின் ஹோம் ஆட்டமாகக் கருதப்படும்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 43 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டியது. அந்த அணியின் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அரைசதம் கடந்த ஒரே பேட்டர் இவர்தான்.

By admin