• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

150 மாவட்ட கலெக்டர்களிடம் அமித் ஷா பேசியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையர் கூறுவது என்ன?

Byadmin

Oct 14, 2024


இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஜூலை 1-ந்தேதி) முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 150 மாவட்ட கலெக்டர்களுடன் பேசினார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.

மாவட்ட கலெக்டர்கள்தான் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவின் போது முறைகேடு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி ராஜிவ் குமார் கூறியதாவது:-

மாவட்ட கலெக்டர்கள் மீது (தற்போது தேர்தல் அதிகாரி) யாரேனும் ஒருவர் செல்வாக்கு செலுத்த முடியுமா?. யார் செய்தது என்று எங்களிடம் யார் என்று சொல்லுங்கள். யார் செய்தாலும் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். வதந்தி பரப்பி ஒவ்வொருவர் மீது சந்தேகத்தை கிளப்புவது சரியானது அல்ல.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். கட்டுப்பாட்டு பிரிவுகளின் இயக்கங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு செய்யப்படும்.

இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

By admin