5
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைவானவர்கள் Facebook மற்றும் Instagram செயலிகளிலிருந்து நீக்கப்படுவர் என்று Meta நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சமூக ஊடகங்களிலிருந்து பதின்ம வயதினரை தடை செய்யும் விரிவான சட்டங்களைச் செயல்படுத்த கான்பரா (Canberra) தயாராகி வருகிறது.
அதன்படி, டிசெம்பர் 10ஆம் திகதி முதல் Facebook, Instagram மற்றும் TikTok ஆகிய சமூக ஊடகங்கள் 16 வயதுக்குக் குறைவான இளையர்களை நீக்க வேண்டும். இல்லையென்றால், அவற்றுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்தது.
இந்நிலையில், இந்தத் தடை நடப்புக்கு வருவதற்கு முன்னதாகவே பதின்ம வயதினரைத் தங்கள் தளங்களிலிருந்து நீக்கத் தொடங்குவதாக Meta தெரிவித்துள்ளது.
அது குறித்துப் பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் Meta நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 13 முதல் 15 வயது வரையிலான சுமார் 350,000 பதின்ம வயதினர் Instagram செயலியைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், சுமார் 150,000 பதின்ம வயதினர் Facebook கணக்கு வைத்துள்ளனர்.