• Fri. Apr 3rd, 2026

24×7 Live News

Apdin News

1956 சூயஸ் நெருக்கடி: உலக அதிகார சமநிலையை மாற்றிய திருப்புமுனை

Byadmin

Apr 3, 2026


1956 சூயஸ் நெருக்கடி: உலக அதிகார சமநிலையை மாற்றிய திருப்புமுனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூயஸ் நெருக்கடியின்போது, போர்ட் சயீத்தில் உள்ள சூயஸ் கால்வாயின் நுழைவாயிலில் மூழ்கடிக்கப்பட்ட தடுப்புக் கப்பல்கள், வான்வழியில் இருந்து பார்க்கப்படும் காட்சி.

உலகளாவிய வர்த்தகப் பாதைகள் தடங்கல்களைச் சந்திப்பதாலும், மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பதாலும், சூயஸ் கால்வாயின் மூலோபாய முக்கியத்துவம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

கப்பல் போக்குவரத்துத் தாமதங்கள் முதல் எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் வரை, சமீபத்திய நிகழ்வுகள், இந்தக் குறுகிய நீர்வழிப் பாதையின் மீதான கட்டுப்பாடு உலகளாவிய அதிகார இயக்கவியலை வடிவமைத்த ஒரு கடந்த காலத்தை எதிரொலிக்கின்றன.

கடந்த 1956ஆம் ஆண்டின் சூயஸ் நெருக்கடி ஒரு பிராந்திய மோதல் மட்டுமல்ல. அது ஏகாதிபத்திய செல்வாக்கு, தேசியம் மற்றும் சர்வதேச கூட்டணிகளை மறுவரையறை செய்த ஒரு திருப்புமுனையாகும். இந்த நெருக்கடி எப்படி, ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வது, அதன் இன்றைய முக்கியத்துவத்தை விளக்குகிறது.

கால்வாய் உருவாக்கம்

கடந்த 1854ஆம் ஆண்டில், பிரான்சின் முன்னாள் தூதரான ஃபெர்டினாண்ட் டி லெசெப்ஸ், எகிப்தின் வைஸ்ராய் முகமது சயீத்தை ஒரு கப்பல் போக்குவரத்து கால்வாய் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு சம்மதிக்க வைத்தார்.

இந்தக் கால்வாய், ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் வகையில், சுமார் 100 மைல் பாலைவனத்தின் வழியாகச் செல்வதாகத் திட்டமிடப்பட்டது.

By admin