• Sun. Oct 25th, 2026

24×7 Live News

Apdin News

1987இல் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல்

Byadmin

Oct 25, 2026


யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987இல் இந்திய இராணுவத்துக்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக் குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக் கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தனர்.

1987 ஒக்டோபர் 24ஆம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவச வாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டடங்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.

இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலை இல்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin