• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

Byadmin

Aug 24, 2025


1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவலைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நினைவேந்த நிகழ்வானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24)  சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமிகோவில் முன்றலில் இடம்பெற்றது.

சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அஅ.அமலநாயகி சட்டத்தரணி த. ஜெயசிங்கம் பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் மற்றும் சித்தாண்டி முறக்கொட்டசேனை சந்திவெளி ஆகிய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

By admin