• Thu. Apr 16th, 2026

24×7 Live News

Apdin News

2 முறை மத்திய அமைச்சர், 3 முறை தோல்வி, 4 முனை போட்டியில் எல்.முருகன்: பிபிசி களஆய்வு

Byadmin

Apr 16, 2026


 அவினாசி, பாஜக, அதிமுக, திமுக, தேர்தல் 2026
படக்குறிப்பு, அவினாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது.

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

‘அதிமுக கோட்டை’ என்று வர்ணிக்கப்படும் அவினாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த தனபாலை இரு முறை தேர்வு செய்த அவினாசி தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது இந்த தொகுதியை மீண்டும் கவனம் பெறவைத்துள்ளது.

அவரை எதிர்த்து முக்கியமான 3 கட்சிகளிலும் மருத்துவர், ஆசிரியர்கள் என பட்டதாரி இளம்பெண்கள் போட்டியிடுவது இந்த தொகுதியின் மீது பல தரப்பினரிடத்திலும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு கட்சிகளிலும் ஏராளமான வாக்குறுதிகள் தரப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சராகவுள்ள எல்.முருகன் வெற்றி பெறுவாரா என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

ஆனால் அதிமுகவினர் தான் தொகுதியில் அதிகமாக உழைக்கிறார்கள் என்கிறார் எல்.முருகன். இது பற்றி அவரிடம் கேட்டபோது, ஊடகங்களுக்குதான் அதிருப்தி இருக்கிறது என்று பிபிசியிடம் கூறினார் எல்.முருகன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

கால் நூற்றாண்டாக அதிமுக வசம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் அவினாசி (தனி), பெருமளவு கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இறுதியாக வெளியான வாக்காளர் பட்டியலின்படி, இந்தத் தொகுதியில் தற்போது 2,50,346 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1980ஆம் ஆண்டிலிருந்து 2021 வரையிலும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 1996 தேர்தலில் மட்டுமே திமுக வென்றது. 1980-இல் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றதைத் தவிர்த்து, மற்ற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக நேரடியாக நின்று வென்றுள்ளது.

By admin