• Fri. Jun 13th, 2025

24×7 Live News

Apdin News

“2021 போல 2026 இருக்காது”- மார்க்சிஸ்ட் கட்சியின் தொகுதிக் கணக்கால் திமுகவுக்கு தலைவலியா?

Byadmin

Jun 12, 2025


தி.மு.க-வை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட் கட்சி - த.வெ.க பக்கம் அணிமாற வாய்ப்புள்ளதா? அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேறாத சிலவற்றை பெ.சண்முகம் பட்டியலிட்டார்.

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

“கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டுகளால் வெற்றி பெற முடியாது. தனித்து நின்றால் அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும்” எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித்தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

‘கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியாது’ என, ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டிக்கு அவரது பதில் இவ்வாறாக இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தால் என்ன சர்ச்சை? தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிருக்கு, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

By admin