• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

2024 நோபல் பரிசு: மைக்ரோ RNA மரபணு ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது

Byadmin

Oct 7, 2024


அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன்

2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) ஆராய்ச்சிக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையான திசுக்களால் ஆனது என்பதையும் விளக்க உதவுகிறது. மரபணுக்களில், மைக்ரோ RNA எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இவர்களின் ஆராய்ச்சி இருந்தது.

அவர்கள் இருவருக்கும் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா (£810,000) பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன ஆராய்ச்சி?

மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள DNA-வில் நமது மரபணு சார்ந்த தகவல்கள் இருக்கின்றது.

By admin