• Fri. Jan 2nd, 2026

24×7 Live News

Apdin News

2025 ஆம் ஆண்டில் இணையவழி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Byadmin

Jan 2, 2026


2025 ஆம் ஆண்டில் நாட்டில் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் இணையவழி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற இணையவழி குற்றங்கள் ஆகும்.

சமூக ஊடகங்களில் காணப்படும் போலி கணக்குகள் மற்றும் ஊடுருவப்பட்ட கணக்குகள் ஊடாக இந்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

பகுதியானவை சமூக ஊடகங்கள் வாயிலாக நடத்தப்படும் போலி கணக்குகள், ஊடுருவப்பட்ட (Hacked) கணக்குகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பானவை எனக் குறிப்பிட்டார்.

இதனால் நிதி மோசடிகள், பாலியல் துன்புறுத்தல்கள் , ஆபாசமான விடயங்கள், பொதுமக்களையும் தனிநபர்களையும் பாதிக்கும் தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகிய குற்றங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

தொடர்பாடல், வர்த்தகம் மற்றும் நிதி நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் டிஜிட்டல் தளங்களை சார்ந்து இருப்பதைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மிகவும் அதிநவீன மற்றும் மோசடியான முறைகளைக் கையாளுகின்றனர்.

குறிப்பாக, இணையப் பாதுகாப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் முதல் முறையாக இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இவ்வாறான குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களை இணையத்தில் பகிர்வதைத் தவிர்க்கவும். சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளை சரிபார்க்கவும். ஏதேனும் சைபர் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு தெரியப்படுத்தவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

By admin