• Fri. Dec 12th, 2025

24×7 Live News

Apdin News

2025 இல் முதலிடத்தில் உள்ள பாஸ்போர்ட் எது? இங்கிலாந்து, இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

Byadmin

Dec 12, 2025


2025ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் தரவரிசையை Arton Capital நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டு குடிமகன் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் (Visa on Arrival) மூலம் பயணிக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 179 புள்ளிகளுடன், 134 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 45 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலமும் பயணம் மேற்கொள்ள முடியும். மீதமுள்ள 19 நாடுகளுக்கு மட்டுமே முன்கூட்டிய விசா தேவைப்படுகிறது.

UAE-வின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட், உயர் தனிநபர் வருமானம், உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் 10 ஆண்டுகள் வரையான கோல்டன் விசா போன்ற கொள்கைகளால் உலகம் முழுவதும் தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பணக்காரர்களிடையே மிகுந்த விருப்பமான பாஸ்போர்டாக உள்ளது.

அடுத்தபடியாக, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகியவை 175 புள்ளிகளுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. சிங்கப்பூர் கடந்த ஆண்டு 30ஆவது இடத்திலிருந்து இந்த ஆண்டு 2ஆவது இடம் வரை கணிசமாக முன்னேறியுள்ளது.

174 புள்ளிகளுடன் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, பின்லாந்து, லக்சம்பர்க், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுகல், கிரீஸ், ஆஸ்திரியா, மலேசியா, நோர்வே, அயர்லாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய 19 நாடுகள் இணைந்து மூன்றாவது இடத்தில் உள்ளன.

இங்கிலாந்து, இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

இங்கிலாந்து மற்றும் கனடா 169 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், அமெரிக்கா 168 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன.

இதைப் போல, இந்தியா 74 புள்ளிகளுடன் 67ஆவது இடத்தில் உள்ளது. இந்திய குடிமக்கள் 29 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 45 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலமும் பயணிக்க முடியும். ஆனால், 124 நாடுகளுக்கு முன்கூட்டிய விசா தேவைப்படுகிறது.

அதேநேரத்தில், இலங்கை 57 புள்ளிகளுடன் 84ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 45 புள்ளிகளுடன் 91ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை குடிமக்கள் 21 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 36 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலமும் பயணிக்கலாம். ஆனால், 141 நாடுகளுக்கு விசா தேவை.

By admin