3
Good Things Happened To Ajith Kumar In 2025 : அஜித் நடிப்பில், 2 ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இது மட்டுமல்ல, அவருக்கு இந்த ஆண்டில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அது குறித்து இங்கு பார்ப்போம்.
அஜித்திற்கு ராசியான ஆண்டாக அமைந்த 2025:
2025ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் கூட இன்னும் முழுதாக முடியவில்லை. ஆனால் அதற்குள் நடிகர் அஜித்திற்கு பல நல்ல விஷயங்களை நடந்து விட்டது. இவரது ரசிகர்களுக்கு இவர் குறித்து வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் குஷியாக இருக்கிறது. அப்படி அவருக்கு நடந்து நல்ல விஷயங்கள் குறித்தும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் குறித்தும் இங்கு பார்ப்போம்.
1.கார் ரேஸில் 3ஆம் இடம்:
நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி பிடித்த ஒரு விஷயம் கார் ரேஸ். இதுவரை பைக் மற்றும் காரில் ரேஸ் செய்து விபத்தில் சிக்கி இருக்கும் இவர் 13 அறுவை சிகிச்சைகளை கடந்து வந்திருக்கிறார். இருப்பினும் ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் தனக்கு பிடித்த ஹாபி என கலக்கி வருகிறார் அஜித். அந்த வகையில் அவர் கடந்த மாதம் நடந்த துபாய் 24H கார்பந்தயத்தில் கலந்து கொண்டார். இதில் இவரது அணி இந்தியா சார்பில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்றது. இது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்ததாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவிட்டனர்.
2.பத்மபூஷன் விருது:
நடிகர் அஜித்திற்கு இந்தியாவில் உயரிய விருதான பத்மபூஷன் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சாதித்தவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை அஜித் முதன்முறையாக வாங்க இருக்கிறார்.
நடிகர் அஜித், கடந்த 15 ஆண்டுகளில் பெரும்பாலும் எந்த திரை பிரபலங்களின் திருமணங்களிலும், தான் நடித்த படங்களின் ப்ரமோஷன் விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் இந்த ஆண்டு அதற்கு சற்று மாறுபட்ட ஆண்டாக அமைந்தது. பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமணத்தில் அவர் கலந்து கொண்டது அனைவருக்கும்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
3.இரண்டு படங்கள்.
அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. ஆனால் அதோட நிற்காமல் வரும் ஏப்ரல் மாதத்திலேயே அவர் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படி ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
4.படங்கள் சோலோவாக ரிலீஸ்..
வழக்கமாக அஜித்தின் படங்கள் வரும்போது அதனுடன் சேர்ந்து விஜய் படமும் வெளியாகும். அப்படி இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு பெரிய ஹீரோயின் படமும் அதற்கு போட்டியாக வெளியாகும். ஆனால் இம்முறை பொங்கலுக்கு வெளியாக வேண்டிய விடாமுயற்சி படம் சோலோவாக பிப்ரவரியில் வெளியானது. இப்போது குட் பாய் அட்லி திரைப்படமும் அதே வகையில் ஏப்ரல் மாதம் தனியாக வெளியாக உள்ளது.
5.பல ஆண்டுகளுக்குப் பிறகு நேர்காணல்…
அஜித் மிகவும் பிரைவேட்டான பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும். தான் நடிக்கும் படங்களின் சூட்டிங் பின் போது மட்டும் தான் கேமராக்கு முன்பு இருப்பார். தனது குடும்பத்துடன் இருக்கும்போதோ, தனிப்பட்ட வேலைகள் ஏதேனும் செய்யும்போதோ கேமராக்கள் தன் கண் முன் இருந்தால் கோபப்படுவார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேர்காணலில் பேசி இருக்கும் இவர், அதன் பிறகு சமீபத்தில் தான் கார் ரேஸின் போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார். அதில், “அஜித் வாழ்க விஜய் வாழ்க என கோஷம் போடுகிறீர்கள் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று அவரது ரசிகர்களையே அவர் பார்த்து கேள்வி கேட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நேர்காணலும் வைரலானது. இது அஜித்துக்கு நல்ல விஷயமோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தது.
6.விஜய்-அஜித் உரையாடல்:
இப்போது வரை பலரும் விஜய்யும் அஜித்தையும் போட்டி நடிகர்களாக கருதி வருகின்றனர். ஆனால் நிஜத்தில் இவர்கள் நல்ல நட்புறவில் இருக்கின்றனர். அஜித் விருது வாங்கிய போது விஜய் எந்த வாழ்த்து செய்தியையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் மீது விஜய்க்கு பொறாமை என்றெல்லாம் கிளப்பி விட்டனர். ஆனால், இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அஜித் கார் ரேஸில் மூன்றாம் இடம் பெற்றபோதும், பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் முதல் ஆளாக கால் செய்து வாழ்த்து தெரிவித்தவர் விஜய்தான் என்பதை அவர் தெரிவித்தார். இதையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நன்றி : zeenews.india.com